கும்ப ராசி அன்பர்களே …! மிக முக்கியமாக உங்களுடைய ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். செயல் நிறைவேற பொறுமை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியதிற்கு சிகிச்சை பெறுவது ரொம்ப நல்லது. தொழில் போட்டிகள் ஓரளவு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க கூடும்.
மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் புதிய பரிமாணத்தை நோக்கி எடுத்துச் சென்று புதிய முயற்சிகளிலும் நிறைவேறும். நல்ல முன்னேற்றமான சூழ்நிலை பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகி உங்களுக்கு கை கொடுக்கும். மற்றவரை சந்தேக பார்வையால் நீங்கள் கொஞ்சம் சிரமப் படுத்தக் கூடும் கவனம் கொள்ளுங்கள். பேசும் போது நிதானத்தை மேற்கொள்ளுங்கள். மற்றவர்களை தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள்.
இன்று புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: நீலம் பச்சை மஞ்சள் நிறம்.