சென்னையில் முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு முயற்சிகள் எடுக்கும் போது சித்த மருத்துவம் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அவங்க முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இன்றைய தினம் அனைத்து வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு பக்கம் அலோபதி மருத்துவர்கள் தங்களுடைய முயற்சியிலும், இன்னொரு பக்கம் இந்திய மருத்துவமான சித்தா, ஹோமியோபதி, இயற்க்கை மருத்துவம் போன்ற சிகிச்சை கொடுத்து வருகின்றோம். இது ஆயுஷ் அமைச்சகம் சொல்வதைப்போல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோயாளிகள் விரைவாக குணமடைவது பாராட்டக்கூடிய செய்தி. இதில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்கள், இந்திய மருத்துவக் கழகம் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
சென்னையில் கொரோனாவை கையாளும் விதத்தில் என்னோட ஒரே வேண்டுகோள் என்னவென்றால் மாஸ்க் போடுவது, கை கழுவுவது இதை பின்பற்ற வேண்டும். சென்னையில 39 ஆயிரத்து 537 தெருக்களை எடுத்தால் 5,210 தெருக்களில் தான் கொரோனா இருக்கு. ஆனா எல்லாருக்கும் ஒரு அச்சம், சென்னை முழுவதும் இந்த நோய் இருக்குதா ? என்று , மற்ற இடங்களில் நோய் பரவாமல் தடுக்க முழுமையாக மாஸ்க் போட்டு கடைபிடித்தார்கள.நமக்கு சவாலான பகுதிகளான தேனாம்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை இந்த பகுதியில் தான் மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கல.
கொரோனா நோயாளிகளை அழைத்து வர சுகாதாரத்துறையுடன் பேசி கூடுதலாக 50 ஆம்புலன்ஸ் போட்டுள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனி ஒரு போன் நம்பர் கொடுத்துள்ளோம். கொரோனா படுக்கை எண்ணிக்கையை மருத்துவமனையிலும் கூடுதல் படுத்தப்பட்டுள்ளதோடு, GOVID கேர் சென்டரில் 17,000 படுக்கைகள் போட்டுள்ளோம். அடுத்த இரண்ட, மூன்று வாரங்களில் அதிகமான டெஸ்ட் செய்யும்போது கண்டிப்பாக கேஸ் வரும். அப்போது, மற்றவர்களுக்கு பரவாமல் இது ரொம்ப உள்ளது.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க எல்லா நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சித்தா கபசுரக் குடிநீர், ஹோமியோபதி மருந்து, மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மருத்துவரின் வழிகாட்டலின் நாம் அனைத்து மருந்துகளும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.மருத்துவமனைகளிலும் தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் மேற்பார்வையில், மக்கள் விருப்பத்திற்கு இணங்க கொடுக்கின்றோம். கேரளாவிலும் பாரம்பரிய மருத்துவத்துவ முறையில் நல்ல சக்சஸ் பண்ணி இருக்காங்க. ஒருத்தர் கொரோனா சோதனை செய்கின்றார். ரெண்டு நாள் பல இடத்தில் சுற்றுகின்றார். அவருக்கு 36 மணி நேரத்திற்கு பின் பாசிட்டிவ் என்று வந்த பின்பு அவர் போன இடங்கள் அனைத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் சோதனை செய்கின்றோம்.