மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
இன்று மட்டும் 3, 493 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 3717 ஆக உயர்ந்துள்ளது. அதில் இன்று மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47,793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் இன்று மட்டும் 1718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.