Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை திருப்பத்தூர் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 1,497, செங்கல்பட்டில் 128, திருவள்ளூரில் 92, காஞ்சிபுரத்தில் 26, திருவண்ணாமலையில் 22, தூத்துக்குடியில் 18, அரியலூரில் 4, கடலூரில் 8, தருமபுரியில் 3, திண்டுக்கல்லில் 2, கள்ளக்குறிச்சியில் 17, கன்னியாகுமரியில் 6, மதுரையில் 31, நாகையில் 8, நாமக்கல்லில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 6, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிவகங்கையில் 12, தென்காசியில் 4, தஞ்சையில் 7, தேனியில் 3, திருவாரூரில் 6, திருச்சியில் 7, நெல்லையில் 15, விழுப்புரத்தில் 16, விருதுநகரில் 7, வேலூரில் 5, கோவையில் 6, கரூரில் 1 என இன்று 31 மாவட்டங்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று 6 மாவட்டங்களில் புதிதாக தோற்று ஏற்படவில்லை. அவை ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக தொற்று இல்லை.

வெளிமாநிலத்தில் இருந்து சொந்தவூர் வந்த 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 15, கேரளாவில் 3, அந்தமான் மற்றும் பஞ்சாபில் இருந்து தமிழகம் வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கத்தாரில் 7, குவைத்தில் 2, சவூதி அரேபியாவில் இருந்து ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 78 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை மையங்களில் 6,73,906 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 18,231 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |