Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றார் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2012 முதல் 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றிய நிலையில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட அவர், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். தமிழக சுகாதாரத் துறையின் செயலராக ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பீலா ராஜேஷ் செயல்பட்டுவந்தார்.

இந்த நிலையில், தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் அந்தத் துறையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Categories

Tech |