Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவி… முதல்வர்!!

சேலம் எடப்பாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடனுதவிகளை வழங்கினார்.

கூட்டுறவு வங்கி மூலம் சுமார் ரூ.36.44 கோடி மதிப்பிலான கடனுதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதனால் சேலத்தில் சுமார் 7,038 பேர் பயனடைவர். சேலம் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேட்டுர் அணையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகைக்கு தற்போது வந்துள்ளார்.

அப்போது, சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கொரோனா சிறப்புக் கடனுதவிக்கான காசோலையை வழங்கினார். கூட்டுறவுத்துறை மூலம் 3,100 பேருக்கு ரூ.10.70 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும், ஊரக வளர்ச்சி திட்டத்தின் சார்பாக மகளிர் திட்டத்தின் கீழ் 1,474 பேருக்கு ரூ.26.8 கோடி கடனுதவிகளையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ஊரக திட்டத்தின் கீழ் 2, 464 பேருக்கு 4 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் ஆட்சி தலைவர் ராமன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித்தலைவர் இளங்கோவன், மத்திய கூட்டுறவு வாங்கி கூடுதல் பதிவாளர் மிர்னாலினி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் எல்லை பாதுகாப்புப் படைவீரர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் எடப்பாடி அருகில் உள்ள சித்தூர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வீரரின் மனைவி மற்றும் குழந்தைகள் இன்று முதல்வரை சந்தித்தனர். அப்போது, குழந்தைகளின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என வீரரின் மனைவி கோரிக்கை வைத்தார்.

Categories

Tech |