Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

6 கோயில் கலசங்கள்… ரூ 10,000 மதிப்பு… திருடியது யார்?… போலீசார் விசாரணை..!!

திருவையாறு அருகே ரூ 10,000 மதிப்புள்ள 6 கோயில் கலசங்கள் திருடுபோனதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்துள்ள அம்மன்பேட்டை ராஜேந்திரம் மேலப்பேட்டை தெருவில் அமைந்துள்ளது ஜனமுத்தீஸ்வரர் திருக்கோயில்.. இந்தக் கோவிலுக்கு அதே ஊரை சேர்ந்த கணபதி குருக்கள் தினமும் பூஜை செய்துவருகின்றார். இந்நிலையில் நேற்றும் கணபதி குருக்கள் பூஜைகளை முடித்த பின் வீட்டுக்கு சென்றுவிட்டு காலை பூஜைக்கு வந்தார்..

அப்போது கோயிலின் பரிவார தெய்வங்கள் கோபுரத்திலிருந்த 6 செம்பு கலசங்களை காணவில்லை. திருடுபோன இதன் மதிப்பு சுமார் 10,000 ரூபாய் ஆகும். இந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் கவியரசு புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |