தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டிஉள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு வரக்கூடியது சூழலில் ஏற்கனவே சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார. இவர் சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுகாதாரத்துறை செயலாளர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
பேரிடர் காலங்களில் அவருடைய பணி என்பது பாராட்டுக்குரியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சுனாமி வந்த போது நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார்.இந்த நிலையில் தான் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு, ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.