குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன், செங்கோட்டியன், கே.பி.அன்பழகன், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக உள்ளது, நீர் இருப்பு 64 டிஎம்சி, நீர் வரத்து 1,439 கன அடி, குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் மேட்டூர் ஆணைக்கு தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் தோன்றி சுமார் 860 கி.மீ பயந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு திறக்கப்பட்டள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் மூலம் 12 மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.