மாலை மற்றும் இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
நம்மில் பலருக்கு இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் அப்படி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெரும்பான்மையானோர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த செய்தி தொகுப்பின் மூலம் அவற்றை அறிந்து கொள்வோம்.
பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் காணப்படும். இந்த பொட்டாசியம் சத்துக்கள் நாள் முழுவதும் உழைப்பால் சோர்ந்து போன தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற விரும்புபவர்கள் தினமும் மாலை வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல உறக்கம் உறங்கலாம்.