Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை: இனி வாரத்தில் 3 நாள்…. முழு கடையடைப்பு…!!

செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது பெரிய ஆபத்தை உருவாக்கி வருகிறது. தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமுல் படுத்தலாம் என்ற ஆலோசனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் ஒருபுறம் வெளியாக, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் வியாபாரிகள் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கடைகளை மூட முடிவு செய்துள்ளனர். செங்குன்றத்தில் இதுவரை கொரோனாவால் 46 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |