Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை…. ஐசிஎம்ஆர் விளக்கம்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பது அவசியம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல, குடிசை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மிக பெரிய நாடக இருந்தாலும் பாதிப்பு மிக குறைவு என ஐ.சி.எம்.ஆர், டி.ஜி., பேராசிரியர் (டாக்டர்) பால்ராம் பார்கவா கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவலின் வீரியம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவிலேயே பாதிப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பைக் குறைக்க முடியாது. மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பயனுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு உத்திகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Categories

Tech |