இந்தியாவில் மத சுதந்திரம் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
உலக நாடுகளில் இருக்கும் மத சுதந்திரம் குறித்து வருடந்தோறும் அமெரிக்கா அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமாக கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை கடந்த புதன்கிழமை அன்று அமெரிக்காவின் உள்துறை செயலர் மைக் பாம்பியோ தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் சாமுவேல் கூறுகையில் சில காலங்களாக இந்தியாவில் நடந்து வரும் சம்பவங்கள் எங்களுக்கு கவலையளிப்பதாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடாகவும் மதங்களை மதிக்கும் நாடாகவும் இருந்தது. மதரீதியான நம்பிக்கைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சில காலமாக மத ரீதியான வன்முறைகள் அதிகரிப்பதால் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இப்போது இந்தியாவில் இருக்கும் பிரச்சனையை நாம் பார்க்கிறோம்.
இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து உயர்மட்ட ரீதியாக உரையாடல் ஒன்று தொடங்கவேண்டும். அதன்பிறகு பிரச்சினைகளை கண்டுபிடித்து அதனை சரிசெய்ய வேண்டும். உடனடியாக பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. அவ்வாறு எந்தத் தீர்வும் காண வில்லை என்றால் இந்திய சமூகத்தில் வன்முறை அதிகரித்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைவதில் சிரமம் ஏற்படும் என கூறியுள்ளார்.