கூகுள் மேப் செயலியில் அமிதாப்பச்சனின் குரலை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பிழைப்பிற்காக வேறு மாநிலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ செல்லும் பட்சத்தில், அங்கே உள்ள ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் அப்படி செல்லத்தேவையில்லை.
கூகுள் மேப் செயலி மூலம் நாம் நினைத்த இடத்தை டைப் செய்தால் போதும், அந்த இடத்திற்கு முன்பே இத்தனை மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை அது அடக்கியிருக்கும். இந்த கூகுள் மேப் செயலில் வாய்ஸ் வசதியும் உண்டு. வாகன ஓட்டிகள் வண்டி ஓட்டும்போது எந்த பாதை வழியாக செல்ல வேண்டும் என்பதை வாய்ஸ் மூலமாகவும் அது சொல்லிக் கொண்டே இருக்கும்.
இது வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் போது கவனம் சிதறாமல் அது கூறியபடி வாகனத்தை இயக்க உதவும். இதற்கு முன்பாக இந்த செயலியில் ஒரு ஒரு பெண்ணின் குரல் கேட்கும். இந்நிலையில் கூகுள் அமிதாப் பச்சனின் குரலை இங்கிலீஷ் மற்றும் இந்தியில் வாய்ஸ் டோன் கொடுப்பதற்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது அமிதாப்பச்சனின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.