ஊராடங்கினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ரூ10,000 நிவாரணத் தொகையை வழங்க ஆந்திர மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5வது கட்ட நிலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கினால் இந்தியாவில் பல குடும்பங்கள் வருமானமின்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் இடதுசாரிகள் சார்பிலும் , சில பொதுநல அமைப்புகள் சார்பிலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரத்திற்கும் மேல் நிவாரணத் தொகை வழங்கி உதவ வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் இடதுசாரிகள் மத்திய அரசு ரூ 7,500 மாநில அரசு ரூபாய் 5 ஆயிரம் என மொத்தம் 12 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். ஊராடங்கின் தொடக்கத்தில், 1,000 ரூபாய் மட்டுமே ஒரு முறை அரசால் கொடுக்கப்பட்டது. அதன் பின் எந்த ஒரு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இப்படி இருக்கையில், ரூபாய் 12,500 உதவித்தொகை வழங்குவது சாத்தியமா? என்பது தமிழக மக்களின் கேள்விக்குறியாக இருந்தது.
ஆனால் இதனை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாத்தியபடுத்தியுள்ளார். ஊராடங்கில் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளர்கள் சலூன் மற்றும் தையல் கடைக்காரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பத்தாயிரம் உதவி தொகையை பெற தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் அவர்களுக்கு ஆந்திர அரசின் சார்பில் நிவாரண உதவிதொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது