Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது…. ! துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல் …!!

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ சிறுமியை இஸ்லாமியர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் சிறுமி ஒருவர் வேலைக்கு செல்ல தொழிற்சாலை வாகனத்திற்காக காத்திருந்த சமயம் திடீரென வந்த கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமியர்களுக்கு இலக்காக   இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறும்பொழுது எதற்காக எங்கள் சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது.

அவர்கள் வெளியே போகும் போதெல்லாம் இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்கின்றனர். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்ல வாகனத்திற்காக காத்திருந்த சிறுமியை துப்பாக்கி முனையில் இஸ்லாமிய ஆண்கள் கடத்திச் சென்றுள்ளனர். அதோடு அங்கிருந்த மற்ற சிறுமிகளையும் பயமுறுத்தி உள்ளனர். பிரதமர் இம்ரான்காண் மற்றும் இப்பகுதியை சேர்ந்த மற்ற அரசியல்வாதிகள் எங்கள் குறைகளை கேட்டு  தீர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தாள்  இரண்டு அல்லது மூன்று தினங்களில்  பிரச்சினையை தீர்ப்போம் என உறுதி அளிக்கின்றனர். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இதுவரை இல்லை. பாகிஸ்தான் முழுவதிலும் ஏராளமான இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு அவர்களை இஸ்லாமியர்கள் திருமணம் செய்கின்றனர். காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் கூட எங்கள் குறைகளை புறக்கணித்து சிறுபான்மையினரை பரிதாபமாக வாழ விட்டுவிட்டனர் எனக் கூறினார்.

Categories

Tech |