சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
குரங்குசாவடி முதல் சேலம் 4 ரோடு திருமலைப்பள்ளி வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பலத்தை கட்ட கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
பாலத்தின் இருபுறமும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம் செம்ம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். மேம்பாலத்தின் ஒரு பகுதியை கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.