Categories
உலக செய்திகள்

சனி கிரகத்தை விட்டு…. வேகமாக நழுவிச் செல்லும் டைட்டன்…!!

டைட்டன் சனி கிரகத்தை விட்டு வேகமாக நகர்ந்து செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

சனி கிரகம் மற்றும் அதனை சுற்றி கொண்டிருக்கும் கோள்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் கசீனி  என்ற விண்கலம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 11 கிலோமீட்டர் அளவு டைட்டன் சனியிடம் இருந்து விலகிச் செல்வதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தற்போது இருக்கும் நிலவரப்படி 12 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சனி கிரகத்திலிருந்து வட்ட பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் டைட்டன்  சனி கிரகத்திற்கு மிகவும் அருகாமையில் முற்காலத்தில்  இருந்திருக்க வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஆய்வுக் குழுவில் மூத்த ஆசிரியர்களுள் ஒருவரான லைனே இதுகுறித்து கூறியதாவது “மேற்கொள்ளும் ஆய்வு சனி கிரகத்தை சுற்றி இருக்கும் வலைய அமைப்பு எப்போது உருவானது என்பதை தெளிவுபடுத்த உதவும்” எனக் கூறினார். இந்த ஆய்வு குறித்த தகவல்கள் “natural astronomy” என்ற பத்திரிக்கையின் வெளியாகியுள்ளது. சனியிடம் இருந்து டைட்டன் மட்டுமன்றி பூமியிடம் இருந்து சந்திரன் ஒவ்வொரு வருடமும் 3.8 கிலோமீட்டர் என்ற தொலைவு நகர்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |