Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமையில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 210ல் இருந்து 236 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள அநேக மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில், நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்புகள் 34,914 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |