Categories
ஆன்மிகம் ஜோதிடம்

2020 மிதுனராசி Success …! பள்ளத்தில் இருக்கும் உங்கள் நிலைமை படிக்கட்டுகளாக மாறக்கூடும் …!

மிதுன ராசி அன்பர்களுக்கு இப்போது நிலைமை எப்போது மாறும் அதற்கான தீர்வு என்ன அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு சென்று அமர்ந்தார். “திருக்கணித முறைப்படி” ராசிக்கு எட்டில் சனி அது அஷ்டம சனியாகும்.

சனிபகவான் காரக தொகுதியில் முக்கியமானது நீங்கள் போன பிறவிகளிலும் இந்தப் பிறவிகளிலும் செய்த நல்லது கெட்டது போன்ற தீய கருமாவின் விளைவுகளை முடிந்த அளவுக்கு இப்போது அனுபவிக்க செய்வதுதான் சனி பகவான் காரகத்துவம் இவர் கருமகாரர் என்று அழைப்பார்.

நல்ல சிந்தனைகளையும் செயல்களையும் செய்து வருபவர்களை வாழ்க்கையில் பின் பகுதிகளில் சனிபகவான் தூக்கிவிட்டு அழகு பார்ப்பார் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை நீங்கள் அடைவீர்கள் கர்மாவின் வினை பலன்.

அஷ்டம சனி இப்போது உள்ள அஷ்டம சனி கஷ்டத்தை கொடுக்கிறார் அவமானங்கள்,ஏளனங்கள், துரோகம், மனவலி,கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப சண்டை காதல் தோல்வி ஏமாற்றம் உறவினர்களால் ஏளனம் ஏன் இந்த வாழ்க்கை எதற்காக இந்த வாழ்க்கை என புலம்பிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

தவறான முடிவு சில நேரங்களில் எடுக்கத் தோணும் மன விருத்தி அவதி இதைத்தான் நீங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இருந்தபோதிலும் சனிபகவான் எட்டாம் இடத்தில் இருந்தாலும் குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது ஓரளவுக்கு சமாளித்து வேலை மற்றும் தொழிலில் சிறிய அளவு முன்னேற்றத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

இதுவரை உங்கள் ராசியில் ராகு பகவானும் 7 ல் கேதுபகவானும் கடந்த 15 மாதங்களாக அமர்ந்து வலம் வருகின்றார்கள் ராகு-கேது இருவரும் பார்த்தீங்கன்னா நின்ற வீட்டின் காரகங்களை ஜாதகருக்கு தந்து கர்ம பலன்களை கழிக்க செய்வார்.

ராகு ஜென்மத்தில் அமர்ந்து சில இடையூறுகளை உங்களுக்கு தந்துள்ளார் கேது ஏழாம் இடத்தில் அமர்ந்து திருமண தடை காதல் தோல்வி தாமதமான ஒருசிலவற்றை நடத்திவைத்தார்.

தொழில்களில் கூட்டாளிகளால் பண இழப்பு நண்பர்களால் அவமானம் உணவு செரிமான பிரச்சனை உடல் பலவீனமானது ஜென்ம ராகு அதாவது ராசியில் ராகு பகவான் ஏழாம் இடத்தில் கேது இருப்பது சர்ப்ப தோஷம் அதாவது நாக தோஷம் என்பார்கள்.

இந்த நிலைமை எப்போது மாறும் என்றால் ஜூன், ஜூலை,ஆகஸ்ட், மூன்று மாதத்திற்கு வரக்கூடிய ராகு கேது பயிற்சி செப்டம்பர் முதல் வாரத்தில் வரக்கூடியது நிச்சயமாக உங்களுக்கு நன்மை அளிக்கக்கூடும் பள்ளத்தில் இருக்கும் உங்கள் நிலைமை படிக்கட்டுகளாக மாறக்கூடும். உயரக்கூடும் மாற்றம் ஏற்றம் உண்டாகும்.

ராகு 12ஆம் வீட்டிலும் ஆறாம் வீட்டிலும் வரக்கூடும் ராகு பகவான் 12-ஆம் வீட்டில வருவார் பன்னிரண்டாவது இடம் ஒருவருக்கு பார்த்தீங்கன்னா மோட்சத்தை குறிக்கும் காமசுகம் கடல் கடந்த பயணம் செலவினங்கள் திடீர் என்று கிடைக்கக்கூடிய பொருள் நல்ல கனவுகளை குறிக்கும்.

ராகு பகவான் 12ல் இருக்கும் காலம் வெளிநாட்டு தொடர்பை உங்களுக்கு அழைப்பார் அளிப்பார் கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும் திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கக்கூடும் பெரிய மனிதர்களின் தொடர்பை அள்ளித் தருவார் இந்த ராகு.

ரிஷபத்தில் ராகு அமர்ந்திருக்கும் பொழுது குருவின் பார்வை அதாவது நவம்பர் மாதம் வரக்கூடிய குரு பெயர்ச்சி அப்பொழுது அந்த பகவானை பார்த்தீங்கன்னா அந்த ராகு நின்ற வீட்டை பார்ப்பார் ரிஷப ராசியை குரு வந்து பார்வையிடுவார் அப்போ அவர் முழு சூப்பர் ஆவாரு அருளையும் பொருளையும் இந்த ராகு உங்களுக்கு அள்ளித் தருவார்.

கேது பகவான் ஆறாம் வீட்டின் அமருவார் அவர் பார்த்தீங்கன்னா ஆறாம் வீட்டில் இருப்பதால் எதிரிகள் கடன் வழக்கு நோய் பிரச்சனைகளை குறிக்கும் கேது பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்றால் இவை அனைத்தும் மாறும் உங்களுக்கு யோகத்தை கொடுப்பார்.

உங்கள் கடன் பிரச்சனை தீராத நோய் எதிரிகளால் இருந்த தொல்லை கள் இனி இல்லை கேது நல்ல விதத்தில் இருந்தால் ஆன்மீக என்னும் நாணம் இறைத் தேடல் வழங்குவார்.

உங்கள் வீட்டில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார் நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறும் வேலை மற்றும் தொழில் பண இழப்பை இவர் சரி செய்வார் சொத்து வழக்கு பிரச்னை தீர்வுக்கு வரும் உங்களுக்கு நிச்சயமாக சாதகமான காலமாக இருக்கக்கூடும்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் ராகு-கேது எப்படி உள்ளார் என்பதை பொறுத்து தான் பலன்கள் சற்று மாறக்கூடும் பொறுமையுடன் இருந்தால் நிச்சயமாக பெருமை வந்து சேரும்.

வழிபாட்டு கடவுள்:

நீங்கள் விநாயகர் வழிபாடு செய்யுங்கள் அருகம்புல்லும் மல்லிகைப் பூவையும் கேதுவின் அருள் உங்களுக்கு கிடைக்கக்கூடும் விநாயகப் பெருமான் எங்கெல்லாம் இருக்காரோ அங்கெல்லாம் சென்று வழிபாடு செய்யுங்கள் காளி துர்கா நீ பாடும் நீங்கள் நிச்சயமாக செய்ய வேண்டும்.

காளி துர்கா பார்த்தீங்கன்னா சிவன் கோயிலில் இருப்பார்கள் தனி சன்னதியில் இருக்கும் நீங்கள் அவர்களுக்கு எலுமிச்சை மாலையும் மட்டும் குங்குமம் வாங்கிக்கொடுத்து வணங்குங்கள் நிச்சயமாக ராகுவின் அருள் கிடைக்கும்.

ராகு போக காரகன் கேது ஞான காரகன் இருவரின் அருள் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி அடையுங்கள் நல்லதை நினையுங்கள் நிச்சயமாக நல்லதே நடக்கும்

 

 

Categories

Tech |