Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1174 பேர்.. முதல்வர் பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1174 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 73 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். யுஏஇ -42, குவைத் -15, ஓமான் -5, ரஷ்யா -4, நைஜீரியா -3, நைஜீரியா -3, சவுதி அரேபியா -2, இத்தாலி -1 மற்றும் ஜோர்டான் -1 என 73 பேருக்கு பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

அதேபோல, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா -6, தமிழ்நாடு -6, டெல்லி -2, கர்நாடகா -1 என 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சூர் மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் மேலும் இரண்டு சுகாதார ஊழியர்களுக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |