Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தி கொள்ளலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

பத்திரப்பதிவுக்கான டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ – பாஸாக பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இ – பாஸாக பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில் பத்திரப்பத்திவுத்துறை அளித்த டோக்கனையும், பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்து கொண்டு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸாக பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பத்திரப்பத்திவு செய்யபவர்கள் தனியாக இ-பாஸ் பெற தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |