Categories
Uncategorized உலக செய்திகள்

உலகளவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு….. 4 லட்சம் பேர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70,86,008ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,59,972ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,06,107ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதுவரை 20,07,449 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,12,469ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 18,375 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,91962ஆக உயர்ந்துள்ளதுள்ளது. மேலும் 36,499 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,67,673ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 8,984 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,859 பேர் கொரோனோவால் பலியாகியுள்ளனர். ஈரானில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,364 பேருக்கு உறுதியானதால் இதுவரை பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,71,789ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |