ரிஷப ராசி அன்பர்களே …! ஓரளவு நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். அதாவது புதிய முயற்சிகளை இப்போதைக்கு வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல்கள் இருக்கும். சில முயற்சிகளில் தடைகளும், தாமதமும் வந்து செல்லும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பணவரவு சீராக இருப்பதற்கு கடுமையான உழைப்பு இருக்கும்.
நல்ல திட்டங்கள் தான் உங்களை தெளிவு படுத்தும். பணியில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பாராத வகையில் தான் லாபம் வந்து சேரும். தொழிலில் கடுமையான உழைப்பு இருக்கும். உங்களுடைய திறமை வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனம் வேண்டும். அதாவது உங்களைப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் இன்று யாரை நம்பியும் எந்தவித உதவிகளையும் செய்ய வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள்.
உங்களுடைய விருப்பங்கள் உறவினர்களால் இன்று நிறைவேறும். கூடுமானவரை இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மிக முக்கியமாக யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக செல்லுங்கள். காதலர்கள் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப சிறப்பு.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.