Categories
மாநில செய்திகள்

காவிரி டெல்டா பகுதியில் நடக்கும் தூர்வாரும் பணிகளால் 10 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும்: தமிழக அரசு!!

காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த பணிகளால் 10 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கும் என அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டை விட டெல்டா மாவட்டங்களில் இவ்வாண்டு அரிசி உற்பத்தி 1 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளது.

வருகிற ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் பயனடைய உள்ளனர். அதற்கு முன்னதாகவே அணைகள் மற்றும் ஏரிகளை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே 24 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில், 392 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 392 பணிகளை மேற்பார்வையிட 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வேளாண் துறையின் செயலாளர் ககந்தின் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சந்திரமோகன் ஐஏஎஸ், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா ஐஏஎஸ், கரூர் மாவட்டத்திற்கு கோபால் ஐஏஎஸ், திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக் ஐஏஎஸ், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார் ஐஏஎஸ் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |