Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…ஒற்றுமை அதிகரிக்கும்…மதிப்பு கூடும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!     இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தன வரவுகளால் இதுவரை தடைபட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது மட்டும் அவசியம்.

பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும். வசதிகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். மனதிற்கு பிடிக்காத இடத்திற்குச் சென்று வரவேண்டிய சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடியும். திறமையாக நீங்கள் செயல்படுவீர்கள்.

இன்று காதலர்களுக்கு ஓரளவு இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |