தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு -200 கிராம்
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
பட்டை
லவங்கம்
பிரியாணி இலை
சோம்பு
பச்சை மிளகாய்
இஞ்சி-பூண்டு விழுது
தக்காளி
வெங்காயம்
மஞ்சள் தூள்
மிளகாய்த் தூள்
கலந்த மிளகாய் தூள்
சோம்பு தூள்
உப்பு.
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இதை அடை போன்று வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,2 பட்டை,3 லவங்கம்,2 பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வதங்கியதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் கலந்த மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். இதனுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, வேகவைத்த கடலைமாவு அடையை தூளாக்கி சேர்த்து நன்கு வேகவிடவும். பருப்பு நன்கு வெந்தபிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறினாள். சுவையான சென்னை வடகறி ரெடி..!