கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய செயல்களில் நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வழி உருவாகும். பணவரவும் அதிகரிக்கும். உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எதை பற்றியும் கவலை மட்டும் கொள்ள வேண்டாம். பயணத்தின்போது கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாகவே இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும், எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.
காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.