சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, இன்று காலை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். ஏற்கனவே இரண்டு முறை கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்திருப்பது குறிப்பித்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம் ஆகியோரும் உடன் உள்ளனர்.