Categories
தேசிய செய்திகள்

கடிதம் எழுதிய பிரதமர் ….! ”இதையும் எழுதுங்க” மோடியை விமர்சித்த அகிலேஷ் …!!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் இந்தியா – நேபாளம் எல்லை பகுதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜந்தாரா. இவர் நேற்றுமுன்தினம் அதாவது மே 30ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா – நேபாள நாடுகளின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இரு  நாடுகளுக்கு உட்பட்ட எல்லையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்தன் நினைவாக அந்த குழந்தைக்கு  ”பார்டர்”  என புதுமையான பெயரை அப்பெண் சூட்டியுள்ளார்.

Border

”பார்டர்”  என பெயர் சூட்டியுள்ள இந்தக் குழந்தையின் எதிர்கால நலனுக்காக எதிர்கால நலனுக்காக 50,000 ரூபாய் நிதியுதவி தருவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இதனை கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்பால் காஷ்யாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,

ஊரடங்கு அமலில் இருக்கும் காலத்தில் இந்திய – நேபாள நாட்டு எல்லைப்பகுதியில் பிறந்த பார்டர் குழந்தையின் எதிர்காலம் குறித்தும்,மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ரயிலில் வந்த புலம்பெயர் தொழிலாளிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளான ’லாக்டவுன்’ மற்றும் ’அங்கேஷ்’ ஆகியோரின் எதிர்காலம் குறித்து வருங்காலத்தில் யாராவது உண்மையான கடிதம் ஒன்றை எழுத வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது இப்படியான அவல நிலை ஏற்பட்டது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடாமல் கடிதமாக இதனை எழுத வேண்டும் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தான் இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதி இருந்ததை குறிப்பிட்டு, அதை விமர்சிக்கும் வகையில் தற்போது அகிலேஷ் யாதவ் டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |