Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 5ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வருகிறது – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்க ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது போக்குவரத்தை இயக்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் பயணிகளுக்கு மாதாந்திர பயண அட்டை வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும் ஒவ்வொரு பயணம் முடிந்த பின்னரும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் பயணிகள் பேருந்தின் பின்புறம் ஏறி முன்புறம் இறங்குவதை உறுதி செய்ய வேண்டும் பயணிகள் சமூக இடைவெளியுடன் முக கவசங்கள் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது போக்குவரத்து தடை நீட்டிக்கும் என்றும் மற்ற மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து 50% பேருந்துகள் மட்டும் இயங்கும். பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டும் பணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம், 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |