திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ளுர் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.
இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிளுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வது, கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட சேகர் ரெட்டி கோரிக்கை விடுத்தார். தமிழக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கோரிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் அனுமதித்த பிறகே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். முன்னதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆந்திரா மற்றும் தமிழகத்தில் விழுப்புரம், திருவள்ளூர், குடியாத்தம் உட்பட பல இடங்களில் உள்ள ரூ.23.92 கோடி சொத்துக்களை விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்து மத தலைவர்கள், பக்தர்கள் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.