Categories
சென்னை மாநில செய்திகள்

நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம்

மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல் அளித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடல் தென் கிழக்கு – மத்திய கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் மன்னார் வளைக்குடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

மழைப்பதிவு நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் ஒக்கேனக்கலில் 7 செ.மீ., மழையும், ஊத்துக்குழியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி, துருத்துறை பூண்டியில் 4 செ.மீ., மழை பெய்துள்ளதாகவும், அவினாசி, தேவக்கோட்டை, பரமக்குடி, ஊத்தங்கரை, பொன்னமராவதி, ஆயுங்குடி, ஏற்காட்டில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Categories

Tech |