என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் . அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸரில் அரசியல் கலந்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் NGK வருகின்ற மே 31 உலகளவில் ரீலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .