Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சொல்லிட்டாங்க…! ”எங்களுக்கு கவலையில்லை” ஏமாந்து போன அதிமுக …!!

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகார் அளித்தபோது செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

இது நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்த வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் அதிகாரத்தை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் மாவட்ட ஆட்சியரை சந்தித்தேன். மாவட்ட ஆட்சியராக  புரிந்து கொண்டார் என்று செந்தில் பாலாஜி வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வக்கீல், மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலானவர்களை அழைத்து வந்திருக்கிறார் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் திமுக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது. அண்மையில் தான் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |