Categories
சினிமா தமிழ் சினிமா

முக.ஸ்டாலினுக்கு நன்றி….. நயன்தாரா அறிக்கை…..!!

சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் .

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் என்று அறிக்கை வெளியாகியது . இதை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் .

இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார். மேலும் அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது , மூத்த நடிகரான ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் , பெண்களை மிகவும் இழிவாக பேசியதை பற்றி வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்து , சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும். என்னை அருவருக்கத்தக்க வகையில் பேசிய ராதாரவியும்  பெண்ணின்  வயிற்றில் தான் பிறந்துள்ளார்.  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதால் கீழ்தரமாக பேசி பேசி பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. கடினமான சூழ்நிலையில் எனக்கு ஆதரவளித்த நல்ல இதயங்களுக்கும் நன்றி என்றும் நயன்தாரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |