Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் புதிதாக 412 பேர், கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கையானது 964ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். இதேபோல டெல்லியில் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 14,465 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் மேலும் 12 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,0009ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து இருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 41.61% ஆகவும், இறப்பு விகிதம் 2.87% ஆகவும் உள்ளது. தற்போது அதிகபட்சமாக தினமும் 1.1 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன என ஐ.சி.எம்.ஆர் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |