Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?…இந்த முறை முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்!

நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மத்திய அரசு திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

மே 31ம் தேதியோடு 4ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கடத்த 10 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய முதல் தற்போது வரை 4 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 2 முறை ஊரடங்கி நீட்டிக்கப்பட்ட போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தது. மே 31ம் தேதியோடு முடிவடையும் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,380 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 60,491 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,772 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டங்கள் தெரிவிகின்றன.

முதல்வர்களுடன் ஆலோசனை இல்லை என தகவல்:

நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் மாநில முதல்வர்களுடன் பிரதமர் பேச திட்டம் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தந்த மாநில முதல்வர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல, நாடு முழுவதும் விமானம், ரயில் சேவைகளை தொடங்கிவிட்டாலும் கூட முழுமையாக கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு தயங்கி வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |