சீனாவில் இருந்து சென்னை வந்த பூனை தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டது…
சீனாவில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் காரணத்தால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சீன மக்கள் பூடான், வங்கதேசம், மியான்மர், நேபாளம் எல்லைகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு தடை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் விளையாட்டு பொம்மைகள் நிறைந்த கன்டெய்னரில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பூனை இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அந்தப் பூனைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் பூனை அரசு கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு பல விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர். பிறகு சென்னை விலங்கு தனிமைப்படுத்துதல் மற்றும் சான்றிதழ் சேவை அமைப்பினர் 30 நாள் தனிமைப்படுத்தப்பட்டு பூனையை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி சென்னை சுங்கத்துறை பணியாளர்கள்தி கேட்டிடியூட் அறங்கட்டளையிடம் மே 23ம் தேதி அந்த பூனையை ஒப்படைத்தனர் தற்போது ஸ்டோவேவே பூனை தடுப்பதற்கு தயாராக உள்ளது, என குறிப்பிடுகின்றனர்.