Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை to சேலத்திற்கு விமான சேவை 27ம் தேதி முதல் தொடக்கம்!!

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு பயணிகள் விமான சேவையை மே 25 ம் தேதி தொடங்கும் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தாா். அதன்படி நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. சென்னை மற்றும கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது.

மேலும், சென்னையில் இருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் இன்று டெல்லி புறப்பட்டது. விமானத்தில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 260 பயணிகளுக்கு பதிலாக 111 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். ஆனால், பயணிகள் குறைவு காரணமாக முதல்நாளான இன்று 28 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரும் 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை தொங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |