Categories
தேசிய செய்திகள்

எதையும் சமாளிப்போம்…! ”நீங்க அந்நியர்கள் அல்ல” சூப்பர் CM ஆன விஜயன் …!!

கேரளாவில் கொரோனாவுக்கு பின் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க முடியும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாட்டிலேயே முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளத்தில்795 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதில், 275 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் முன்மாதிரியான நடவடிக்கையே அதிகமானோரை கட்டுப்படுத்தி, கொரோனவை கட்டுப்படுத்த காரணம் என்று பல மாநிலங்கள் பாராட்டுகின்றன.

இந்த நிலையில்தான்  #AskTheCM என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்தார். அதில் கேரளாவில் வரக்கூடிய பருவமழை மாற்றம், பேரிடர்கள், வேலைவாய்ப்பு, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கான பணிகள் உட்பட நடவடிக்கைகளை கேரள மாநிலம் எப்படி கையாளும் என்பது குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையுடன்  முதல்வர் பினராய் விஜயன் பதிலளித்தார்.

கொரோனவை  எதிர்கொள்ள கேரளாவில் புதிய வழிமுறைகள் கண்டறியப்பட்டபட்டுள்ளது. கேரளாவில் இதுபோல எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளியே இருந்து கேரளாவுக்கு வருபவர்கள்.  அவர்களை நாம் அந்நியராக பார்ப்பதில்லை.  அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் . ந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது என்று பதிலளித்தார் முதல்வரின் இந்த பதில் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Categories

Tech |