டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கையானது 261ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 13,218 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள் என தகவல் அளித்துள்ளனர்.
ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,894ஆக உயர்ந்துள்ளது. கடத்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பானது 161ஆக அதிகரித்துள்ளது.