துப்பாக்கி வேண்டாம், ஏவுகணை வேண்டாம், எதிரியை துவம்சம் செய்ய புதிய லேசர் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. பறக்கும் விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தும் இந்த லேசர்.
பசுபிக் பெருங்கடலில் அமெரிக்கா நிறுத்தியுள்ள போர்க்கப்பலில் இருந்து ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு லேசர் மூலம் சுட்டு வீழ்த்தியது. ஆளில்லா விமானம் எரிந்த நிலையில் தாக்கப்பட்ட கீழே விழுந்தது. இது ஆளில்லா விமானத்துக்கு மட்டுமல்ல ஆள் இருந்தாலும், இதே நிலைதான் பொருந்தும. துப்பாக்கி, வெடிகுண்டு, ஏவுகணை வெறும் லேசர் லைட், கண்ணுக்கே தெரியாது சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும்.போர் விமானம் பறந்தாலும் சரி, பயணிகள் விமானம் பறந்தாலும் சரி மிகவும் துல்லியமாக லேசரை வைத்து அளிக்க முடியும்.
போர் தந்திரத்தில் அமெரிக்கா சிறந்த நாடு என்பது நமக்கு தெரியும். இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டை அறிமுகப்படுத்தியதே அமெரிக்கா தான். ஜப்பானில் ஹிரோஷிமா நாகசாகில அணுகுண்டை போட்டதும் தான், இப்படி ஒரு அணுகுண்டு என்று ஓன்று இருக்கிறதா என உலகிற்க்கே தெரியும். இதேபோல தான் தற்போது அமெரிக்கா லேட்டஸ்ட்டாக எந்த ஒரு விமானத்தையும், கப்பல்களையும் துல்லியமாக தாக்கும் லேசர் கருவியை வெற்றிகரமாக சோதனை செய்துவிட்டதாக அமெரிக்காவே அறிவித்து விட்டது.
மற்ற ஏவுகணையை விட இது எவ்வளவு வேகம் அப்படின்னு பார்த்தீங்களா ? ஐசிபிஎம் ன்னு சொல்லுவாங்க, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை காட்டிலும், 50 ஆயிரம் மடங்கு வேகம் அதிகம். கண்ணிமைக்கும் நேரத்தில், ஒளி வேகத்தில் சென்று தாக்கி விடும், இது கற்பனைக்கு எட்டாதது. இரண்டாம் உலகப் போரில் அணு ஆயுதத்தை அறிமுகம் செய்த அமெரிக்கா இப்போது போர்களத்தில் லேசரை பயன்படுத்த தயாராகி விட்டது. ஒரு கப்பலின் அல்லது விமானத்தின் முக்கிய பாகங்களை துல்லியமாக தாக்கி கதையை முடிக்கும் இந்த லேசர்.
கண் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்வதைப் போல, இனி போர் களத்திலும் எதிரி ராணுவத்தை தும்சம் செய்து. போரில் பயன்படுத்தினால் ஆபத்தின் வீரியம் அதிகம் அமெரிக்கா அதுக்கும் தயாராகி அறிவித்துவிட்டது. போர் களத்தில் எரிபொருளோ, ஏவுகணையோ தேவையில்லை. கண்ணுக்கு தெரியாத லேசர் ஒளிகள் மனிதர்களை கொன்று குவிக்கும். அமெரிக்கா இதை வெற்றிகரமாக சிந்தித்து விட்டதாக புகைப்படங்களையும், வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.