திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் பாரதி நீதிபதி இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
அப்போது ஆர் எஸ் பாரதி ஆஜர் செய்ய அழைத்துச் செல்லும் போது திமுக எம்எல்ஏக்கள் ரங்கநாதன், ரவிச்சந்திரன், ராஜா உள்ளிட்ட 96 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோயை பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல்பாடுகளில் ஈடுபட்டது என மூன்று பிரிவுகளில் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.