Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கராச்சி அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… !

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் 91 பேர் உள்ளிட்ட 107 பேர் வரை விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடம் தற்போது கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

Categories

Tech |