சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தனக்கு ஊக்கம் அளித்ததாக ரோகித் சர்மா கூறினார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் இணையம் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தங்களது பொழுதுபோக்குகளை டிக் டாக்கில் பதிவிடுவது, ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது, யூடியூபில் பேசுவது, இணையம் வாயிலாக இணைவது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களுக்கு புதுப்புது தகவல்களை சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார்.
அப்போது இரட்டை சதம் அடித்த தருணத்தை பற்றி ரோகித் கூறுகையில், தோனி பொறுமையாக விளையாடும்படி கூறியதாகவும் அதனை நிராகரித்துவிட்டு அதிரடியாக விளையாடியதால் தான் இரட்டை சதம் அடிக்க முடிந்தாகவும் கூறியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்குவது பெரிய வாய்ப்பு என்று தனக்கு அவ்வப்போது அறிவுறுத்திய யுவராஜ் சிங், சேவாக்கின் சாதனையை முறியடிக்க வேண்டும் என தனக்கு ஊக்கம் அளித்ததாகவும், ரோகித் சர்மா கூறினார்.