தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7,219 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 557 பேர், செங்கல்பட்டில் 58 பேர், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.