தருமபுரியில் கொரோனா பாதித்த 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது.
ஈரோடு, கோவை, நாகை, நீலகிரி உள்ளிட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டமும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் 4 பேர் ஏற்கனவே குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் இருந்த ஒருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து தருமபுரி மாவட்டம் முழுவதுமாக மீண்டுள்ளது. எனவே நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களுடன் தருமபுரி மாவட்டமும் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.