Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க…! ”4 பாயிண்ட் ரொம்ப முக்கியம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

பொதுமக்கள் யாருக்கும் பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்தது. நேற்று 3 பேர் மரணமடைந்ததால் மொத்த பலி 82ஆக அதிகரித்தது. அதே போல ஆறுதல் அளிக்கும் தகவலாக நேற்று ஒரே நாளில் 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 4,406ஆக உயர்ந்தது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றோம்.

அதிகமான டெஸ்ட் எடுக்கிறோம், சீக்கிரம் கண்டறியுறோம்,  சரியாக குணப்படுத்துகிறோம், இறப்பு வீதத்தைக் குறைக்கிறோம் இந்த பாயிண்ட்தான் இன்றைக்கு இந்தியாவில் தமிழகத்தில் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி என்று சொல்றாங்க. 

ஏற்கனவே புதிய சவால் என்பது நமக்கு வந்துள்ளது. இப்போதைக்கு வேறு மாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் டெஸ்ட் செய்யுறோம்.தமிழகத்தில் முதலமைச்சர் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என தெரிவித்தார்.

Categories

Tech |