தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயா ஆகிய 5 மாநிலங்களவை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கும் இடையே மே 20ம் தேதி இரவு இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Delhi: Prime Minister Narendra Modi holds meeting with Ministry of Home Affairs (MHA) & National Disaster Management Authority (NDMA) officials to review the situation arising out of #CycloneAmphan in different parts of the country. Home Minister Amit Shah also present. pic.twitter.com/cxR5rXbsGf
— ANI (@ANI) May 18, 2020
இந்த நிலையில் பருவநிலை மாற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.